Sunday 22 May 2011

சில நேரங்களில் சில மனிதர்கள் !

நீங்கள் இந்தியரா ? என்று கேட்க தோன்றிய நாள் அது !

அன்று நாங்கள் எங்களுடய கல்லுரி சார்பாக புற்றுநோயால் பாதிக்க பட்டவர்கள்காக நிதி திரட்ட சென்று இருந்தோம் .... அது சென்னையில் உள்ள பிரபலமான சுற்றுலா தளம் ... கல்லுரி விடுதியில் இருக்கும் என் நண்பர்களுக்கும் எனக்கும் அது முதல் பயணம் சிங்காரா சென்னையில் ....   அது ஒரு கடல்கரை சார்ந்த சுற்றுலா தளம் ,அங்கே கொளுத்தும் வெயிலை கூட பார்க்காமல், மக்கள் வந்து இருந்தார்கள் ! நான் சிறு வயதில் ரசித்த ஒரு இடம் ! பழைய ஞாபகம் !
நாங்கள் நிதி திரட்ட சற்று தயக்கத்துடன் தொடங்கினோம் ... புற்றுநோய் பற்றி வரும் சுற்றுலா வாசிகளிடம் விளக்க ஆரம்பித்தோம்... சிலர் எங்களுடைய பேச்சுகளை கேட்பார்கள் ..சிலர் பிச்சைகாரர்கள் போல் தவிர்த்து விடுவார்கள் !
நண்பர்களும் விடாமல் ...விளக்கம் தந்து , நோட்டீஸ் ஐ கொடுத்து விடுவார்கள்!

மாலை நேரம் நெருங்கி விட்டது , நாங்களும் ஓர் அளவு நிதி திரட்டி விட்டோம! 

அங்கே வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வந்து இருந்தார்கள் ... அப்படி ஒரு சமயத்தில் என் நண்பர் ஒரு வெளி மாநில சுற்றுலா பயணிடம் பேசி கொண்டு இருந்தார் ...சிறிது நேரம் கலித்து நண்பர் வாடியா முகத்துடன் வந்தார் !

என்ன ? என்ன சொன்னார் ? நண்பர் முகத்தில் கோபம் ! 

  அந்த ஆள் சொல்றான் அவன் பெங்களுருவை சேர்ந்தவனாம் !                    

எனக்கு முதலில் புரியவில்லை .. பின்பு நண்பர் சொன்னார் , இது வேறு மாநிலம் ,,, நான் வெறு மாநிலத்தை சேர்ந்தவன் ,,, இங்கே இருபாவர்களுக்கு நான் என் உதவனும் என்ற பாணியில் அந்த நபர் சொல்லி இருக்கார் !
நீயும் இந்த நாட்டில தான் இருக்கியா ? என்று அந்த ஆள் சட்டைய பிடிச்சு கேட்கணும் தொனுச்சு ! 

ஆனா அதே நாளில் நிறைய நல்ல உள்ளங்கள் செய்த உதவிகளையும் மறக்க முடியாது மறைக்கவும் முடியாது  ! நிதி குடுத்து விட்டு ரசிதை வாங்க மறுத்த ஆப்ரிக்கா காரரையும் மறக்க மாடேன் !  உதவி உதவாமல் சென்ற என் நாட்டு காரர்களையும் மறக்க மாடேன் !

என் தமிழில் பிழை இருக்கலாம் அனால் நான் சொன்னவிஷ்யதில் இல்லை என்று எண்ணுகிறேன் ! 

உங்களால் முடிந்த அளவு உதவுங்கள் மனிதன் யார் என்று பார்க்காமல் !
 

1 comment:

  1. cha...subblatta maav avana chappals-ala adikanum...^$%$&#$##@#%$#% ^&^&%$#@@$%- avana thituren nee kandukaatha...

    ReplyDelete

Feel free for words...